திருட்டு புல்லட் பைக் இன்ஜீனில் குட்டி கார்; குட்டி ஹெலிகாப்டர் செய்த இன்ஜினீயர் – சினிமா சூட்டிங்கிலும் பயன்படுத்திய பகீர் பின்னணி

சென்னையில் திருடப்படும் புல்லட் பைக்கில் உதிரி பாகங்களைத் தனித்தனியாக பிரித்து அதன்மூலம் குட்டி ஹெலிகாப்டர், குட்டி கார்களைத் தயாரித்து இன்ஜினீயர் மாணவர்களுக்கு விற்ற சென்னை இன்ஜினீயரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னையில் தொடர்ச்சியாக புல்லட் திருட்டுக்கள் நடந்தன. அதுதொடர்பான புகார்கள் காவல் நிலையங்களில் குவிந்தன. இதையடுத்து புல்லட் திருடர்களைப் பிடிக்க இணை கமிஷனர் சுதாகர், ஸ்பெஷல் டீமில் உள்ள எஸ்.ஐ- சுதாகர், தலைமைக் காவலர் சரவணகுமார், ஓட்டுமொத்த திருட்டு கும்பலைப் பிடித்து புல்லட்களையும் பறிமுதல் செய்தனர்.

பைக்குளைப் பார்வையிடும் போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால்

பல சிசிடிவிக்களை ஆய்வு செய்த ஸ்பெஷல் டீம் போலீஸார், இரவு பகல் பாராமல் புல்லட் திருடர்களைக் கண்டறிந்தனர். திருட்டு புல்லட்டில் ஈடுபட்ட தஞ்சாவூர் மல்லிப்பட்டினத்தைச் சேர்ந்த முகமது சஃபி, கேரளாவைச் சேர்ந்த சிபி ஆகியோரை கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்து திருட்டு புல்லட்களைப் பறிமுதல் செய்தனர். அவர்கள் அளித்த தகவலின்படி தமிழகம் முழுவதும் செயல்பட்ட ஓட்டுமொத்த புல்லட் திருடர்களின் நெட்வொர்க் போலீஸாருக்கு தெரியவந்தது.

கறுப்பு நிற புல்லட்களுக்கு அதிக மவுசு என்பதால் அந்த நிற புல்லட்களை அதிகளவில் இந்த டீம் திருடி வந்திருக்கிறது. சிசிடிவிக்கள் மூலம் ஒவ்வொருவரையும் கைது செய்த போலீஸார், தற்போது தூத்துக்குடியைச் சேர்ந்த சுல்தான், சென்னை புதுப்பேட்டையில் வசித்துவருகிறார். மணலியைச் சேர்ந்த பாஸ்கர், புதுப்பேட்டையைச் சேர்ந்த இஸ்மாயில், கோட்டூர்புரத்தைச் சேர்ந்த சோகன்குமார் ஆகியோரை போலீஸார் கைது செய்திருக்கின்றனர். அவர்களிடம் விசாரித்தபோது, புல்லட்களைத் திருடி தமிழகம் முழுவதும் விற்ற வந்த இந்தக் கும்பல், சென்னை புதுப்பேட்டையில் வைத்து புல்லட்களின் பாகங்களை தனித்தனியாகவும் விற்றிருக்கின்றனர்.

இன்ஜினீயர் சோகன்குமார்

அதில் ஏரோநாட்டிக்கல் இன்ஜினீயரிங் படித்த சோகன்குமார், புல்லட் இன்ஜீன்களை இந்தக் கும்பலிடமிருந்து வாங்கி, அதில் குட்டி கார், குட்டி ஹெலிகாப்டர் ஆகியவற்றை செய்திருக்கிறார். திருட்டு புல்லட் இன்ஜினீலில் சினிமா பட சூட்டிங்கிக்கும் சோகன்குமார், பிரத்தேயகமாக பைக் ஒன்றைத் தயாரித்து கொடுத்திருக்கிறார்.

இன்ஜினீயர் சோகன்குமாரிடம் விசாரித்தபோது திருட்டு கும்பலிடமிருந்து 10 ஆயிரம் ரூபாய்க்கு புல்லட் பைக்கின் இன்ஜீன்களை வாங்கி அதை புராஜக்ட் செய்து லட்சக்கணக்கில் இன்ஜினீயரிங் படிக்கும் மாணவர்களுக்கு விற்றுள்ளார். இதுவரை புல்லட் திருட்டு வழக்கில் 13 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 39 புல்லட் பைக்குகளைப் போலீஸார் பறிமுதல் செய்திருக்கின்றனர். தொடர்ந்து புல்லட் திருட்டு குறித்து தலைமைக் காவலர் சரவணகுமார் மற்றும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

புல்லட் திருட்டு கும்பலின் முழு நெட்வொர்க்கை திறமையாக விசாரித்த தனிப்படை போலீஸாரை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் வெகுவாகப் பாராட்டியிருக்கிறார்.

இந்தச் செய்தியைப் படித்து விட்டீர்களா….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *