வழக்கு விவரம் அறிய தகவல் மையம் தொடங்கப்படுகிறது.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் சார்பில் 10,906 காவலர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கு ஏராளமானோர் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பித்து வருகின்றனர்.
சில நேரங்களில் விண்ணப்பதாரர்கள் தங்கள் மீது வழக்கு நிலுவையில் இருப்பது தெரியாமல் விண்ணப்பித்து விடுகின்றனர். இதனால் பணியில் சேருவதில் சிக்கல் ஏற்படுகிறது.
இதை தவிர்க்க கமிஷனர் அலுவலகம், எஸ்.பி. அலுவலகங்களில் தகவல் மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
காவலர் பணிக்கு விண்ணப்பிப்போர் இந்த மையங்களுக்கு நேரில் சென்னை தங்கள் மீது வழக்கு நிலுவையில் உள்ளதா என்ற விவரத்தை அறிந்த பிறகு விண்ணப்பிக்கலாம் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.