2,100 துப்பாக்கிகளை ஒப்படைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சென்னையில் 2,700 பேர் காவல் துறை உரிமம் பெற்ற துப்பாக்கிகளை வைத்துள்ளனர். சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அந்த துப்பாக்கிகளை சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் ஒப்படைக்க சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.
இதுவரை 600 பேர் துப்பாக்கிகளை காவல் நிலையங்களில் ஒப்படைத்துள்ளனர். மீதமுள்ள 2,100 பேரும் துப்பாக்கிகளை ஒப்படைக்க கண்டிப்புடன் உத்தரவிடப்பட்டுள்ளது.