போதை தரும் மருந்துகளை வழங்கக்கூடாது என்று வியாபாரிகளுக்கு சென்னை போலீஸார் உத்தரவிட்டுள்ளனர்.
போதை தரக்கூடிய மருந்துகள், மாத்திரைகளை டாக்டர் பரிந்துரை இன்றி யாருக்கும் வழங்கக்கூடாது. இளைஞர்களுக்கும் சிறுவர்களுக்கும் இருமல் மருந்துகளை மொத்தமாக வழங்கக்கூடாது.
தூக்கத்தை வரவழைக்கூடியை மருந்துகளை டாக்டர் பரிந்துரை சீட்டு இல்லாமல் விற்கக்கூடாது.
இத்தகைய மருந்துகளை தொடர்ந்து வாங்குபவர்கள் குறித்த விவரங்களை போலீஸாரிடம் தெரிவிக்க வேண்டும்.
அனைத்து மருந்து கடைகளிலும் உள்ளூர் போலீஸ் நிலையத்தின் தொலைபேசி எண்ணை எழுதி வைக்க வேண்டும்.
போதை தரும் மருந்துகள் விற்பனை குறித்து பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கலாம். அவர்களின் ரகசியம் காக்கப்படும்.
எங்கள் உத்தரவை மீறி போதை தரும் மருந்துகளை விற்கும் வியாபாரிகள் மீது கடை நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.