தினமும் 40 கி.மீ. சைக்கிள் மிதிக்கும் சென்னை காவலர்

51 வயதாகும் சரவணன் சென்னை நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில், தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார். இவர் தனது அன்றாட பணிகளுக்கு இன்னமும் சைக்கிளைத்தான் பயன்படுத்தி வருகிறார்.

சைக்கிள் ஓட்டுவதன் மூலமாக பிட்டாக இருக்க முடிகிறது. இன்னமும் எனக்குத் தொப்பை இல்லை. மேலும் வயது சார்ந்த நோய்களும் எனக்கு இல்லை. இதற்கு நான் சைக்கிள் ஓட்டுவதே காரணம். ஒவ்வொரு நாளும் 40 கி.மீ. சைக்கிள் மிதிக்கிறேன்.

தலைமைக் காவலர் சரவணன்

தலைமைக் காவலர் சரவணனின் வீடு சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ளது. அங்கிருந்து நந்தம்பாக்கம் காவல் நிலையத்துக்கு நாள்தோறும் சைக்கிள் மிதித்து வருகிறார்.

அவர் கூறுகையில், “சைக்கிள் ஓட்டுவதன் மூலமாக பிட்டாக இருக்க முடிகிறது. இன்னமும் எனக்குத் தொப்பை இல்லை. மேலும் வயது சார்ந்த நோய்களும் எனக்கு இல்லை. இதற்கு நான் சைக்கிள் ஓட்டுவதே காரணம்.
ஒவ்வொரு நாளும் 40 கி.மீ. சைக்கிள் மிதிக்கிறேன். சைக்கிள் ஓட்டுவதால் எனது உடல்நலனும் மேம்படுகிறது. சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படுகிறது” என்றார்.


நந்தம்பாக்கம் சப்-இன்ஸ்பெக்டர் சக்ரவர்த்தி கூறுகையில், ‘ஆரம்பத்தில் நானும் சைக்கிளைதான் பயன்படுத்தினேன். பின்னர் பைக்கிற்கு மாறிவிட்டேன். ஆனால் சரவணன் இன்னும் சைக்கிள் பயன்படுத்துவது பெருமையாக உள்ளது’ என்றார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *