அரசியல், மதம் சார்ந்த கூட்டங்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இந்த மாதத்துக்கான ஊரடங்கு தளர்வுகள் மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்டன. அப்போது அரசியல், சமுதாயம், மதம் சார்ந்த கூட்டங்களை நடத்த அனுமதி வழங்கப்பட்டது. எனினும் இந்த கூட்டங்களில் 100 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
இந்நிலையில் அரசியல், சமுதாயம், மதம் சார்ந்த கூட்டங்களை 100 பேருடன் நடத்த வழங்கப்பட்ட அனுமதியை தமிழக அரசு ரத்து செய்துள்ளது.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸின் 2-வது அலை விஸ்வரூபம் எடுத்துள்ளது. பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் ஒரு மாத ஊரடங்கு அமல் செய்யப்பட்டுள்ளது.
இதை கருத்தில் கொண்டு வைரஸ் பரவலை தடுக்க அரசியல், சமுதாயம், மதம் சார்ந்த கூட்டங்களை நடத்த தமிழக அரசு தடை விதித்திருக்கிறது.