மதம், அரசியல் நிகழ்ச்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
வரும் 16-ம் தேதி முதல் மதம், அரசியல், பொழுது போக்கு உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ளலாம். எனினும் இந்த நிகழ்ச்சிகளில் 100 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். திருமண விழாக்கள், இறுதி சடங்குகளில் 100 பேர் வரை கலந்து கொள்ளலாம்.
தற்போது 50 வயது வரை உள்ளவர்கள் உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 1-ம் தேதி முதல் 60 வயது மற்றும் அதற்கு குறைவான வயது உள்ளவர்களும் உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்லலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பொழுதுபோக்கு பூங்காக்கள், உயிரியல் பூங்காக்கள் வரும் 10- ம் தேதி முதல் செயல்படலாம். அருங்காட்சியகங்கள், பெரிய அரங்குகளையும் 10-ம் தேதி முதல் திறக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
நீச்சல் குளங்கள், கடற்கரை, சுற்றுலா தலங்கள் போன்றவற்றுக்கான தடை வரும் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சர்வதேச விமான சேவைக்கான தடை நீடிக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.