தமிழகத்தில் 51 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் செயல்படுகின்றன. இந்த கல்லூரிகளில் டிப்ளமோ முதலாம் ஆண்டு படிப்பில் 18,120 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். இதற்கான ஆன்லைன் பதிவு கடந்த மாதம் தொடங்கியது. ஜூலை 12-ம் தேதியுடன் விண்ணப்ப பதிவு நிறைவடைவதாக இருந்தது.
மாணவர்களின் நலன் கருதியும் கூடுதல் மாணவர்களை சேர்க்கும் வகையிலும் பாலிடெக்னிக் சேர்க்கைக்கு வரும் 19-ம் தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் https://tngptc.in இணையத்தில் முன்பதிவு செய்யலாம்.