செவ்வாப்பேட்டை அரசு பாலிடெக்னிக்கில் சேர விண்ணப்பிக்கலாம்

செவ்வாப்பேட்டை அரசு பாலிடெக்னிக்கில் சேர விண்ணப்பிக்கலாம் என்று திருவள்ளூர் கலெக்டர் மகேஸ்வரி அறிவித்துள்ளார்.

“செவ்வாப்பேட்டையில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் அமைப்பியல், இயந்திரவியல், மின்னியல், மின்னணுவியல், தகவல் தொடர்பியல்  ஆகிய 5 பாடப்பிரிவுகளில் பட்டய படிப்புக்கான வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை இணைய வழியில் நடைபெற்றது. காலியாக உள்ள இடங்களுக்கு அக். 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். கல்லூரியில் நேரடியாக விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து அளிக்க வேண்டும்” என்று மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *