இந்தி, தமிழ், தெலுங்கு என பல்வேறு மொழிகளில் வில்லனாக மிரட்டி வரும் நடிகர் சோனு சூட், கொரோனா காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள், ஏழைகள் மத்தியில் கதாநாயகனாக வானளாவிய உயரத்துக்கு உயர்ந்து நிற்கிறார். பல கோடிகளை அள்ளி வீசி ஏழைகளுக்கு உதவி செய்து வருகிறார்.அவரது கண்ணில் ஆந்திர ஏழை விவசாயியின் வைரல் வீடியோ தென்பட்டது.

அன்று மாலையே விவசாயி நாகஸ்வர ராவுக்கு சோனு சூட். புதிதாக டிராக்டர் வாங்கி கொடுத்துவிட்டார். நடிகர் மும்பையில் இருந்தாலும் டிராக்டர் விவசாயியின் வீட்டு வாசலுக்கு சென்றுவிட்டது.மொழி, இனம் வேறுபாடின்றி ஏழைகளுக்கு ஓடி, ஓடி உதவி செய்யும் சோனு சூட்டுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன. அவர்களோடு சேர்ந்து நாமும் அவருக்கு ‘ஓ’ போட்டு வாழ்த்தலாம்.