போரூரில் இருந்து பூந்தமல்லி வரை மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்கப்படுகிறது.
சென்னை கலங்கரை விளக்கத்தில் இருந்து பூந்தமல்லி வரை 26.09 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்கப்பட உள்ளது. இந்த வழித்தடம் மயிலாப்பூர், வடபழனி, போரூர் வழியாக பூந்தமல்லி வரை அமைக்கப்பட உள்ளது.
போரூரில் இருந்து பூந்தமல்லி வரை 9 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதன்படி போரூர் சந்திப்பு, ராமச்சந்திரா மருத்துவமனை, ஐயப்பன்தாங்கல் பஸ் நிலையம், காட்டுப்பாக்கம், குமணன்சாவடி, கரையான்சாவடி, முல்லைதோட்டம், பூந்தமல்லி பஸ் நிலையம், பூந்தமல்லி பைபாஸ் சாலை ஆகிய இடங்களில் ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. வரும் ஜனவரியில் திட்டப்பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.