தபால் வங்கி கணக்கில் குறைந்தபட்ச இருப்புதொகை இல்லாவிட்டால் அபராதம்

தபால் வங்கி கணக்கில் குறைந்தபட்ச இருப்புதொகை இல்லாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தபால் வங்கி சேமிப்பு கணக்குகளின் குறைந்தபட்ச இருப்புத் தொகை ரூ.50 ஆக இருந்தது. இதை ரூ.500 ஆக உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டது. இருப்புத் தொகையை ரூ.500 ஆக உயர்த்திக் கொள்ள டிச. 11 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 

அதன்பிறகு குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாவிட்டால் ஆண்டுதோறும் அபராத கட்டணம் ரூ.100 வசூலிக்கப்படும். கணக்கும் காலாவதியாகிவிடும் என்று சென்னை முதன்மை தபால் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *