அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவர் நேர்காணல்

அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவர் நேர்காணல் தேர்வு செப். 26-ம் தேதி நடைபெறுகிறது.

அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டங்களை விற்பனை செய்வதற்காக நேரடி முகவர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்கான நேர்காணல் சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகத்தில் செப். 26-ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

இந்த பணிக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 18 முதல் 55 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பத்துடன் பாஸ்போர்ட் அளவுள்ள 2 புகைப்படங்கள், வயது சான்றிதழ், கல்வி சான்றிதழ், முன்அனுபவ சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும் என்று அஞ்சல் துறை அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *