அஞ்சலக சேமிப்பு கணக்கில் 500 இல்லையா.. ரூ.100 அபராதம்…

அஞ்சலக சேமிப்பு கணக்கில் 500 இல்லையா.. ரூ.100 அபராதம்… விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அஞ்சலக சேமிப்பு கணக்குகளின் குறைந்தபட்ச இருப்பு தொகை ரூ.50 ஆக இருந்தது. இதை ரூ.500 ஆக மத்திய அரசு உயர்த்தியது. இந்த குறைந்தபட்ச இருப்பு தொகை நடைமுறை கடந்த ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி அமலுக்கு வந்தது. இதற்கான கால அவகாசம் அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் அஞ்சலக சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகையை ரூ.500 ஆக உயர்த்தி கொள்ள வரும் டிசம்பர் 11-ம் தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்பிறகு குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாத பட்சத்தில் ஒவ்வொரு ஆண்டும் ரூ.100 அபராத கட்டணம் விதிக்கப்படும் என்று அஞ்சல் துறை அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *