80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கு தபால் வாக்கு

80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கு தபால் வாக்கு நடைமுறை பின்பற்றப்பட உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

“கன்னியாகுமரி மக்களவை தொகுதி உறுப்பினராக இருந்த வசந்தகுமார் அண்மையில் காலமானார். அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

சட்டவிதிகளின்படி அந்த தொகுதியில் 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். வரும் பிப்ரவரிக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது.

மேலும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரை கொரோனா அச்சுறுத்தல் நீடித்தால் பீகார் தேர்தலில் கடைபிடிக்கப்படும் நடைமுறைகள் தமிழகத்திலும் பின்பற்றப்படும். 

80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்குப் பதிவு வசதி செய்து தரப்படும். தமிழக வாக்காளர்களில் 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 3 சதவீதம் பேர் மட்டுமே உள்ளனர்” என்று சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *