வெளிநாடு வாழ் இந்தியர்கள் தபால் வாக்கு போடுவதற்கான ஏற்பாடுகளை தலைமைத் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.
தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தபாலில் வாக்குரிமையை செலுத்த தலைமைத் தேர்தல் ஆணையம் ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.