போலீஸாருக்கு கொரோனா கவச உடை வாங்க ரூ.5 கோடி

போலீஸாருக்கு கொரோனா கவச உடை வாங்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக காவல் துறையில் 1.05 லட்சம் போலீஸார் பணியாற்றுகின்றனர். இந்த ஆண்டு மட்டும் கொரோனாவுக்கு 126 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே தமிழக போலீஸாருக்கு  கொரோனா கவச உடை வாங்குவதற்கு ரூ.5 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

கவச உடையுடன் போலீஸாருக்கு கையுறை, முகக்கவசம், கிருமி நாசினி ஆகியவையும் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *