பிரணாப் முகர்ஜி உடல் தகனம்

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உடல் டெல்லியில் இன்று தகனம் செய்யப்பட்டது.

கடந்த 2012-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை நாட்டின் 13-வது ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜி பதவி வகித்தார்.

இதன்பிறகு டெல்லி ராஜாஜி மார்க் பகுதியில் உள்ள அரசு இல்லத்தில் அவர் வசித்து வந்தார்.

கடந்த 10-ம் தேதி வீட்டின் குளியல் அறையில் அவர் வழுக்கி விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு வழக்கமான பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

அப்போது பிரணாபுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. மூளையில் ரத்தம் உறைந்து சிறிய கட்டி ஏற்பட்டிருப்பதும் தெரியவந்தது.

மூளை கட்டியை அகற்ற கடந்த 10-ம் தேதி அவருக்கு 7 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. கரோனா வைரஸுக்கும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு நுரையீரல் தொற்று மற்றும் சிறுநீரக பாதிப்பு காரணமாக அவரது உடல்நிலை மோசமானது. சில நாட்களுக்கு முன்பு அவர் கோமா நிலைக்குச் சென்றார்.

பிரணாப் முகர்ஜி உடலுக்கு அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்.
பிரணாப் முகர்ஜி உடலுக்கு அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்.

வென்டிலேட்டர் உள்ளிட்ட உயிர் காக்கும் கருவிகளின் உதவியுடன் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை அவர் உயிரிழந்தார். மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பிரணாபின் மறைவுக்கு 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.
இதைத் தொடர்ந்து பிரணாபின் உடல் டெல்லியில் உள்ள அவரது வீட்டுக்கு நேற்று கொண்டு செல்லப்பட்டது.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பிரணாப் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.

இதன்பின் டெல்லி லோதி மின் மயானத்தில் முழு ராணுவ மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. இதிலை ஏராளமானோர் பங்கேற்றனர்.

பிரணாபின் சுருக்கமான வரலாறு

மேற்குவங்கத்தின், பிர்பும் மாவட்டம், மிராதி கிராமத்தில் கமதா கின்கர் முகர்ஜி, ராஜலட்சுமி தம்பதியின் மகனாக கடந்த 1935 டிசம்பர் 11-ம் தேதி பிரணாப் முகர்ஜி பிறந்தார். அவரது அக்கா அன்னபூர்ணா, தம்பி பியூஷ்.

கடந்த 1969-ம் ஆண்டில் பிரணாப் முகர்ஜி அரசியலில் நுழைந்தார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வலதுகரமாக செயல்பட்டார். அதன்பிறகு ஆட்சிப் பொறுப்புக்கு வந்த ராஜீவ் காந்திக்கும் பிரணாபுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டது.

தற்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சற்று தொலைவிலேயே பிரணாபை வைத்திருந்ததார்.
பிரதமருக்கான அனைத்து தகுதிகளும் பிரணாபுக்கு இருந்தன.

பல்வேறு அரசியல் நெருக்கடிகளால் அவரது பிரதமர் கனவு, கடைசி வரை நனவாகவில்லை. பிரதமராக வேண்டியவர், கடந்த 2012-ம் ஆண்டில் ஜனாதிபதி ஆனார்.

பதவி காலம் நிறைவடைந்த பிறகு அரசியலில் இருந்து முழுமையாக ஒதுங்கினார். சுமார் 50 ஆண்டுகள் பொதுவாழ்க்கையில் கோலோச்சிய பிரணாப் முகர்ஜியின் மறைவு நாடு முழுவதையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பிரணாப் முகர்ஜியின் இறுதிச் சடங்கு டெல்லி லோதி மின் மயானத்தில் நேற்று நடைபெற்றது. அவரது மகன் அபிஜித் முகர்ஜி இறுதிச் சடங்குகளை செய்தார். பிரணாபுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்ததால் இறுதிச் சடங்கில் பங்கேற்றோர் பாதுகாப்பு கவச உடைகளை அணிந்திருந்தனர்.
பிரணாப் முகர்ஜியின் இறுதிச் சடங்கு டெல்லி லோதி மின் மயானத்தில் நேற்று நடைபெற்றது. அவரது மகன் அபிஜித் முகர்ஜி இறுதிச் சடங்குகளை செய்தார். பிரணாபுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்ததால் இறுதிச் சடங்கில் பங்கேற்றோர் பாதுகாப்பு கவச உடைகளை அணிந்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *