முன்னாள் ஜனாதிபதி பிரணாப் கவலைக்கிடம்

கடந்த 2012 முதல் 2017 வரை நாட்டின் 13-வது ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜி பதவி வகித்தார். அவர் தற்போது டெல்லியில் வசித்து வருகிறார்.
அவர் ட்விட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில், “மருத்துவமனைக்கு வழக்கமான பரிசோதனைக்கு சென்றேன்.

அங்கு எனக்கு நடத்தப்பட்ட சளி மாதிரி பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. என்னோடு தொடர்பில் இருந்த அனைவரும் தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். கொரோனா பரிசோதனை செய்து கொள்வது நல்லது” என்று தெரிவித்தார்.

டெல்லியில் செயல்படும் ராணுவ மருத்துவமனை.
டெல்லியில் செயல்படும் ராணுவ மருத்துவமனை.


வீட்டு குளியல் அறையில் வழுக்கி விழுந்ததால் காயமடைந்த பிரணாப் முகர்ஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். அப்போது நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.
மேலும் வழுக்கி விழுந்ததில் பிரணாபின் மூளையில் ரத்தம் உறைந்தது.

அதற்கு அவசரமாக அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலை எழுந்தது.
இதைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள ஆர்.ஆர். ராணுவ மருத்துவமனையில் பிரணாபுக்கு நேற்று மூளையில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.

அதன்பிறகு அவரது உடல்நிலை மோசமானது. உயிர்காக்கும் வென்டிலேட்டர் கருவி உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *