‘வேளாண்மை துறையில் இயற்கை வேளாண்மைக்கு என தனிப்பிரிவு உருவாக்கப்படும். இயற்கை வேளாண்மை வளர்ச்சி திட்டம் நடப்பாண்டு முதல் செயல்படுத்தப்படும். இயற்கை வேளாண்மை செய்யும் விவசாயிகளுக்கு இடுபொருள் மானியம் வழங்கப்பட்டு ஊக்கப்படுத்தப்படும்.
இயற்கை எருவை பயன்படுத்தும் உழவர்களின் பட்டியல், இயற்கை விவசாயிகள் பட்டியல் என வட்டாரம்தோறும் தயாரிக்கப்படும். இயற்கை எருவை பயன்படுத்தும் விவசாயிகளுக்கு இயற்கை விவசாயிகள் என்ற சான்றிதழ் வழங்கப்படும். இயற்கை வேளாண் திட்டத்துக்கு ரூ.33.03 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்’ என்று தமிழக வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.