தனியார் பள்ளிகளின் கட்டணம் வரும் கல்வியாண்டில் 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை உயரக்கூடும் என்று தெரிகிறது.
தமிழகத்தில் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகிறது. இதற்காக பள்ளி கட்டண நிர்ணய குழுவை தமிழக அரசு நியமித்துள்ளது. இந்த குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி பாலசுப்பிரமணியன் பதவி வகிக்கிறார்.
தனியார் பள்ளி கல்வி கட்டணம் நிர்ணயித்து 3 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டதால், புதிய கட்டண விகிதங்களை சமர்ப்பிக்குமாறு தனியார் பள்ளிகளுக்கு, பள்ளி கட்டண நிர்ணய குழு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தனியார் பள்ளிகள், பெற்றோர், கல்வியாளர்கள் தெரிவிக்கும் கருத்துகளின் அடிப்படையில் புதிய கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்பட உள்ளது. சுமார் 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை தனியார் பள்ளிக் கட்டணம் உயரக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.