தனியார் ரயில்களுக்கான நிறுத்தங்களை அந்தந்த நிறுவனங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாட்டின் 109 வழித்தடங்களில் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட 151 பயணிகள் ரயில்களை இயக்க தனியார் துறைக்கு ரயில்வே அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.
இதுவரை 23 தனியார் நிறுவனங்கள் ரயில்களை இயக்க விருப்பம் தெரிவித்துள்ளன.தனியார் ரயில்களை இயக்குவதற்கான வரைவு ஒப்பந்தத்தை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
அதில் எந்தெந்த நிலையங்களில் ரயில்களை நிறுத்தி செல்வது என்பதை தனியார் நிறுவனங்களை முடிவு செய்து கொள்ளலாம் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.