தனியார் ரயில்களை இயக்க 102 நிறுவனங்கள் தகுதியானவை என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் 150 வழித்தடங்களில் தனியார் ரயில் சேவையை தொடங்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதற்காக தனியாரிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
மொத்தம் 120 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 102 விண்ணப்பங்கள் தகுதியானவை என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வரும் 2023-ம் ஆண்டு மார்ச் முதல் தனியார் ரயில்கள் இயக்கப்படும். ரயில் கட்டணத்தை தனியார் ரயில் நிர்வாகவே முடிவு செய்து கொள்ளலாம் என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.