தொழில் வரியை ஓராண்டுக்கு தள்ளுபடி செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தென்சென்னை வடக்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் வானகரத்தில் நடைபெற்றது.
பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஊரடங்கு காலத்தை கருத்தில் கொண்டு கடைகளுக்கான மாநகராட்சி சொத்து வரி, தொழில் வரியை ஓராண்டு காலத்துக்கு தள்ளுபடி செய்ய வேண்டும். மாநகராட்சி சுகாதார சட்டத் திருத்தம் வணிகர்களுக்கு எதிரான ஒரு கருவியாக பயன்படுத்தப்படுகிறது.
அதை அரசு முறைப்படுத்த வேண்டும். சுகாதார சட்ட விதிகளின் கீழ் கடைகளை மூடுவதை தடுக்க வேண்டும்.
வணிக உரிமம் புதுப்பித்தலை மார்ச் 2021 வரை நீட்டிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.