ஏழை மாணவர்களுக்கு இலவசமாக ஸ்மார்ட்போன், இன்டர்நெட் பேக் வழங்க டெல்லி ஐகோர்ட் உத்தரவு

ஏழை மாணவர்களுக்கு இலவசமாக மொபைல், இன்டர்நெட் பேக் வழங்க டெல்லி ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொரோனா ஊரடங்கு காலத்தில் ஏழை மாணவர்களும் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க வகையில் அவர்களுக்கு இலவசமாக ஸ்மார்ட்போன் அல்லது லேப்டாப் அல்லது டேப்லட் வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி ஐஸ்டிஸ் பார் ஆல் என்ற தன்னார்வ அமைப்பு டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை நீதிபதிகள் மன்மோகன், சஞ்சீவ் நருளா அமர்வு விசாரித்து முக்கிய உத்தரவைப் பிறப்பித்தது.

“ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க ஏழை மாணவர்களுக்கு மொபைல் போன் மற்றும் இன்டர்நெட் பேக் வழங்கப்பட வேண்டும். கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கும் இவற்றை அரசு வழங்க வேண்டும்.

ஒருவேளை அரசு வழங்கத் தவறினால் தனியார் பள்ளிகளே இவற்றை மாணவர்களுக்கு கொடுத்துவிட்டு அதற்கான செலவை அரசிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம்.

மொபைல் போன், இன்டர்நெட் பேக் வழங்கும் பணியை மேற்கொள்ள அரசு அதிகாரிகள், தனியார் பள்ளி பிரதிநிதிகள் அடங்கிய குழுவை நியமிக்க வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *