பப்ஜி மதன், கிருத்திகாவின் செக்ஸ் பேச்சுக்கள் – காதல் மனைவி கைக்குழந்தையுடன் கம்பி எண்ணும் சோகம் #pubg madan

சமூகவலைதள பக்கத்தில் யூடியூபர் பப்ஜி மதன், அவரின் மனைவி கிருத்திகாவின் ஆபாச பேச்சுக்களுக்கு எதிரான பதிவுகளை அதிகளவில் வந்துக் கொண்டிருக்கின்றன. நெட்டிசன்களின் இந்த ஆவேச பதிவுகள், தமிழக காவல்துறையின் காவல் நிலைய படிகளில் ஏறி புகார்களாகின.

யூடியூபர் மதன்

கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக யூடியூபர் மதனைக் கைது செய்ய வேண்டும் என நெட்டிசன்கள் பதிவுகளைப் பதிவு செய்ததோடு மகளிர் அமைப்புகள் என்ன செய்கிறது, மீடியாக்கள் என்ன செய்கிறது  சமூகஆர்வலர்கள் ஏன் குரல் கொடுக்கவில்லை என்ற கேள்விகளையும் முன்வைத்திருந்தனர்.

சென்னை புளியந்தோப்பு காவல் சரகத்தில் செயல்படும் சைபர் பிரிவுக்கு ஒருவர், மதன் மீது புகாரளித்தார்.

அதன்பேரில் போலீஸார், மதனின் யூடியூப் பக்கத்துக்குச் சென்று பதிவு செய்யப்பட்டிருந்த வீடியோக்களைக் கேட்டு அதிர்ச்சியடைந்தனர்.

பப்ஜி மதன், அவரின் மனைவி கிருத்திகா
பப்ஜி மதன், அவரின் மனைவி கிருத்திகா

அந்தளவுக்கு பெண்களை ஆபாசமாகவும் கேவலமாகவும் மதன், லைவ்வில் பேசியிருந்த வீடியோக்கள் அதிகளவில் யூடியூப் சேனலில் இருந்தன. யூடியூபர் மதனின் ஆபாச பேச்சுக்கள் வீடியோக்களைக் கேட்ட காவல்துறை அதிகாரிகள் அவர் மீது நடவடிக்கை எடுக்க களமிறங்கினர்.

 சேலத்தைச் சேர்ந்த மாணிக்கத்தின் மகன் மதன், டிப்ளமோ இன்ஜினீயரிங் படித்து விட்டு சென்னை சோழிங்கநல்லூர் அருகே உள்ள வேங்கைவாசல் பகுதியில் உள்ள சொகுசு பங்களாவில் குடும்பத்தோடு குடியிருந்த தகவல் கிடைத்தது.

சம்மன் அனுப்பி அவரிடம் விசாரிக்க முடிவு செய்த போலீஸார் அங்குச் சென்றபோது வீடு பூட்டப்பட்டியிருந்தது. இந்தச் சமயத்தில் வடபழனியைச் சேர்ந்த அபிஷேக் ரபி என்பவர், மதனின் வீடியோக்களைப் பார்த்தாகவும் அவர் பெண்களை ஆபாசமாக பேசியதைக் கேட்டதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் செயல்படும் மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் பிரிவில் புகாரளித்தார்.

மதனின் மனைவி கிருத்திகா

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வினோத்குமார் வழக்குப்பதிவு செய்து மதனை தேடிவந்தார்.

மதனின் செல்போன் நம்பரை டிராக் செய்தபோது சேலத்தைக் காட்டியது .உடனடியாக அங்குச் சென்ற போலீஸார், மதனைத் தேடினர்.

அப்போது அவரின் வீட்டில் கைக்குழந்தையுடன் இருந்த மதனின் மனைவி கிருத்திகா.,  மதனின் அப்பா மாணிக்கம், சகோதரர் ஆகியோரை விசாரணைக்காக சென்னைக்கு அழைத்து வந்தனர்.

பப்ஜி மதன், அவரின் மனைவி கிருத்திகா
பப்ஜி மதன், அவரின் மனைவி கிருத்திகா

இந்தத் தகவல் தெரிந்ததும் மதன் செல்போனை தூக்கி போட்டுவிட்டு பதுங்கிக் கொண்டார். அதனால் அவரின் இருப்பிடத்தை போலீஸாரால் கண்டறியமுடியவில்லை.

சென்னைக்கு அழைத்து வரப்பட்ட கிருத்திகா, மாணிக்கத்திடம் போலீஸார் விசாரித்தனர். அப்போது கிருத்திகாதான் மதனின் யூடியூப் சேனலின் அட்மினாக செயல்பட்டது தெரியவந்தது.

மேலும் மதனை அவர் காதலித்து திருமணம் செய்த தகவலும் தெரிந்தது. இன்ஜினீயரிங் படித்த கிருத்திகாவும் மதனின் ஆபாச பேச்சுகளுக்கு உறுதுணையாக இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து கிருத்திகாவைக் கைது செய்த போலீஸார் அவரை நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைக்குழந்தையுடன் கிருத்திகா சிறைக்குச் சென்றிருக்கிறார் மாணிக்கத்திடம் தொடர்ந்து விசாரணை நடந்துக் கொண்டிருக்கிறது.

தடை செய்யப்பட்ட பப்ஜி கேம்மை விபிஎன் மூலம் டவுன்லோடு செய்து விளையாடிய மதனும் கிருத்திகாவும் சூப்பர் சாட்டிங் மூலம் லைவ்வாக பப்ஜி பிரியர்களுக்கு சில டிப்ஸ்களைக் கொடுக்கவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன் டாக்ஸிக் மதன் 18 பிளஸ் என்ற யூடியூப்பை தொடங்கியிருக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட கிருத்திகா
கைது செய்யப்பட்ட கிருத்திகா

மதனின் பள்ளி பருவ போட்டோக்கள்தான் டிபியாக வீடியோவில் தெரியும் மதனின் செக்ஸ் கலந்த பேச்சுக்களால் அவரின் யூடியூப் சேனல்களுக்கு லட்சக்கணக்கில் சப்க்ரைபர்ஸ்கள் வந்தனர்.

மேலும் முகமே தெரியாத மதனுக்கு லட்சக்கணக்கானோர் ரசிகர்களாகினர்.

லட்சக்கணக்கில் வருமானம்

அதன்மூலம் லட்சக்கணக்கில் வருமானம் கொட்டத் தொடங்கியது. அது மதன், கிருத்திகாவின் லைஃப் ஸ்டைலை மாற்றியது. ஆடி, பிஎம்டபுள்யூ போன்ற சொகுசு கார்களில் இருவரும் வலம் வரத் தொடங்கினர்.

மீசை வைக்காத மதன், கூலிங்கிளாஸ் அணிந்திருக்கும் பால்வடியும் முகத்தோடு காட்சி தரும் மதனின் தற்போதைய போட்டோ யாருக்கும் தெரியாது.

யூடியூப் சேனல் லைவ்வில் பப்ஜி கேம்ஸ்க்கான டிப்ஸ், டிரிக்ஸ் எனச் சொல்லிக் கொண்டு பெண்களைப்பற்றி ஆபாசமாகவும் செக்ஸியாகவும் அச்சில் ஏற்ற முடியாத அளவுக்கு பேசும் மதனுக்கு ஈடுகொடுக்கும் வகையில் கிருத்திகாவும் லைவ்வில் பேசி ப்பஜி கேம் பிரியர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறார்.

அந்த ஆடியோக்களைக் கேட்ட பப்ஜி பிரியர்கள் பலர் இந்தச் சேனலின் ஒவ்வொரு வீடியோக்களையும் ஆர்வமாக பார்த்திருக்கின்றனர்.

கிருத்திகாவும் மதனின் ஆபாச பேச்சுக்கள் கொண்ட வீடியோக்களை பதிவு செய்து வந்திருக்கிறார்.

மதனின் யூடியூப் சேனல்
மதனின் யூடியூப் சேனல்

கிருத்திகாவும் மதனும் கணவன் மனைவி என்று கூட தெரியாமல் பலர் டாக்ஸிக் மதன் 18 பிளஸ் யூடியூப் சேனலின் வீடியோக்களுக்கு அடிமையாகியிருக்கின்றனர்.

சிறுவர்கள் சிறுமிகள், இளைய தலைமுறையினரில் பப்ஜி கேம் பிரியர்களை மதனின் செக்ஸ் கலந்த பேச்சுக்கள், அர்ச்சனைகள் வெகுவாக கவர்ந்திழுத்திருக்கிறது.

கண்டித்த நீதிபதி

ஏழை, எளியவர்களுக்கும் நோயாளிகளுக்கும் உதவுவதாகக் கூறி வீடியோ லைவ்வின்போது கூறும் மதன், நன்கொடையையும் பெற்றிருக்கிறார். அந்த வங்கி கணக்கு விவரங்களை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.

மதனின் ஒவ்வொரு மோசடி வேலைக்கும் கிருத்திகாவும் உறுதுணையாக இருந்து வந்திருக்கிறார்.

மதன் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமலிருக்க அவரின் பாஸ்போர்ட்டை முடக்கம் செய்யவும் வங்கி கணக்குகளை முடக்கவும் போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மதனின் சமூகவலைதள பக்கங்களை முடக்கவும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு சென்னைப் போலீஸார் கடிதம் எழுதியிருக்கின்றனர்.

 இந்தச் சூழலில் மதனுக்கு முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த நீதிபதி தண்டபாணி, மதன் தரப்பு வழக்கறிஞர்களிடம் மதன் பேசிய வீடியோக்களை காதுகொடுத்து கேட்க முடியவில்லை. அதைக் கேட்டுவிட்டு வாருங்கள் என மனு விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்திருக்கிறார்.

பெங்களூருவிலிருந்து மதன் எங்குச் சென்றார் என்று சைபர் க்ரைம் போலீஸார் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.  

மதன், கிருத்திகா மற்றும் அவர்களின் குடும்பத்தினரின்  சொத்து விவரங்களை போலீஸார் சேகரித்து வருகின்றனர். பல கோடிக்கணக்கில் சொத்துக்கள் இருக்கும் தகவல் வெளியாகியிருக்கிறது.

மதன் சிக்குவாரா…. சிக்கினால் அவரின் மறுபக்கம் தெரியவரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *