சென்னை புறநகர் ரயில்களில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை

சென்னை புறநகர் ரயில்களில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மே 6-ம் தேதி புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன. இதையொட்டி தெற்கு ரயில்வே விரிவான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சென்னை புறநகர் ரயில்களில் மே 6-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. முன்கள பணியாளர்கள், ரயில்வே ஊழியர்கள், மத்திய, மாநில அரசு ஊழியர்கள் மட்டுமே பயணம் செய்யலாம்.

உயர் நீதிமன்றம் உட்பட பல்வேறு நீதிமன்றங்களின் நீதிபதிகள், வழக்கறிஞர்களும் புறநகர் ரயில்களில் பயணம் செய்யலாம். துறைமுக ஊழியர்கள், ஊடகத் துறையினர், மின்னணு வணிகத்தினர், அரசு தனியார் வங்கி பணியாளர்களும் பயணம் செய்யலாம். கல்வி நிறுவன ஊழியர்கள், மாணவர்களும் புறநகர் ரயிலில் பயணம் செய்யலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *