பஞ்சாபில் கரைபுரண்டோடும் கள்ளச்சாராயம்.. இதுவரை 98 பேரை காவு வாங்கியது…

பஞ்சாப் மாநிலத்தில் கள்ளச்சாராயம் கரைபுரண்டோடுகிறது. இதன்காரணமாக கடந்த சில நாட்களில் கள்ளச்சாராயத்தால் 98 பேர் உயிரிழந்துள்ளனர்.


பஞ்சாபின் அமிர்தசரஸ், டார்ன் டாரன், குருதாஸ்பூர் மாவட்டங்களில் கடந்த புதன்கிழமை கள்ளச்சாராயம் குடித்த சிலரின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவர்கள் ஆங்காங்கே உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அடுத்த சில நாட்களில் கள்ளச்சாராயம் குடித்த பலரும் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அடுத்தடுத்து உயிரிழப்புகள் நேரிட்டன.

கள்ளச்சாராய உயிரிழப்புகளால் கதறி அழும் பெண்கள்


இதுகுறித்து பஞ்சாப் போலீஸின் உயர் அதிகாரி குல்வந்த் சிங் கூறுகையில், கடந்த சனிக்கிழமை வரை கள்ளச்சாராயத்தால் 75 பேர் உயிரிழந்தனர். இன்று ஒரே நாளில் 12 பேர் பலியாகி உள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 98 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 25-க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளோம்” என்று தெரிவித்தார்.


ஏதோ ஓர் இடத்தில் கள்ளச்சாராயம் மொத்தமாக தயாரிக்கப்பட்டு பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. இதன்காரணமாகவே உயிரிழப்பு அதிகமாக ஏற்பட்டுள்ளது என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

குடும்ப தலைவரை பறிகொடுத்த பெண்ணும் அவரது மகனும் கண்ணீர் விட்டு கதறுகின்றனர்.


அமிர்தசரஸ் உள்ளிட்ட 3 மாவட்டங்களிலும் குடும்ப தலைவர்கள், மகன்கள், சகோதரர்களை இழந்த பெண்கள் கண்ணீர் விட்டு கதறி அழுகின்றனர். இந்த கள்ளச்சாராய உயிரிழப்பு குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *