புதிய உச்சத்தை தொட்டது புட்ட பொம்மா

கடந்த ஜனவரியில் வெளியான ‘அலா வைகுந்தபுரம்லோட என்ற தெலுங்கு திரைப்படத்தில் இடம் பெற்ற புட்ட பொம்மா பாடல் பட்டி,தொட்டியெல்லாம் பிரபலம் அடைந்தது.


மொழி புரியாவிட்டாலும் நடிகர் அல்லு அர்ஜுன், நடிகை பூஜா ஹெக்டேவின் துள்ளல் நடனம், தாளம்போட வைக்கும் இசையமைப்பாளர் தாமனின் இசை, காட்சி அமைப்பு ஆகியவற்றால் ‘புட்ட பொம்மா’ சமூக வலைதளங்களை வியாபித்து பரவியது.


டிக் டாக் உள்ளிட்ட வலைதளங்களில் புட்ட பொம்மாவுக்கு இளைஞர்களும் இளம்பெண்களும் கையை ஆட்டி, உடலை வளைத்து, நெளித்து ஆடினர். இந்த பாடலை கேட்டதுமே குட்டீஸ்கள் ஆடத் தொடங்கினர்.


தெலுங்கு திரையுலகில் இதற்கு முன்பு ‘பிடா’ படத்தில் இடம்பெற்ற வச்சின்டே என்ற பாடல் 26 கோடி பார்வையாளர்களை பெற்று முதலிடத்தைப் பிடித்தது. அந்த சாதனையை புட்ட பொம்மா முறிடியடித்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இதுவரை 26 கோடிக்கும் அதிகமானோர் புட்ட மொம்மாவை பார்த்து ரசித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *