ரயில் டிக்கெட்டுகளில் விரைவில் கியூ.ஆர். குறியீடு நடைமுறை அமலுக்கு வருகிறது.கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, பயணிகளிடம் தொடர்பில்லாமல் கியூ ஆர் குறியீடு அடிப்படையில் ரயில் டிக்கெட்டை சரிபார்க்கும் முறையை இந்திய ரயில்வே அமல் செய்ய திட்டமிட்டுள்ளது.
தெற்கு ரயில்வே சார்பில் சென்னை-டெல்லி இடையே இயக்கப்படும் சிறப்பு ரயிலில் கியூ.ஆர். குறியீடு நடைமுறை விரைவில் அமல் செய்யப்படும். இதன்மூலம் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முடியும் என்று மூத்த அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.