சம்பளத்தை பாதியாக குறைத்த ராகுல் பிரீத் சிங்

கொரோனா வைரஸால் திரையுலகுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை கருத்தில் கொண்டு நடிகை ராகுல் பிரீத் சிங் தனது சம்பளத்தை பாதியாகக் குறைத்துக் கொண்டுள்ளார்.


கடந்த 2009-ம் ஆண்டில் கன்னடத்தில் வெளியான கில்லி திரைப்படத்தில் ராகுல் பிரீத் சிங் அறிமுகமானார். கடந்த 2011-ம் ஆண்டில் பெமினா மிஸ் இந்தியாவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது தெலுங்கு, தமிழ் திரைப்படங்களில் அவர் கொடி கட்டி பறக்கிறார்.


தடையறத் தாக்க, என்னமோ ஏதோ, ஸ்பைடர், தேவ், என்ஜிகே, தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார். கொரோனா வைரஸால் திரையுலகுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டிருக்கிறது.


இதை கருத்தில் கொண்டு நடிகை ராகுல் பிரீத் சிங், தனது சம்பளத்தை பாதியாகக் குறைத்துக் கொண்டுள்ளார். அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகையில், “ராகுல் பிரீத் சிங் இதுவரை ஒரு படத்துக்கு ஒரு கோடியே 50 லட்சம் ரூபாயை சம்பளமாக பெற்று வந்தார். கொரோனா வைரஸ் பாதிப்பை கருத்தில் கொண்டு அவர் தனது சம்பளத்தை 75 லட்சமாகக் குறைத்து கொள்ள முன்வந்துள்ளார்” என்று தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *