விரைவில் ஏசி 3 அடுக்கு எகானமி ரயில் பெட்டி அறிமுகம் செய்யப்பட உள்ளது.
ரயில்களில் ஏசி 3 அடுக்கு எகானமி ரயில் பெட்டி வசதியை அமல்படுத்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக 50 ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவை இந்த மாத இறுதியில் ரயில்வே நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும்.
இந்த ஏசி 3 அடுக்கு எகானமி ரயில் பெட்டிகள் விரைவில் சூப்பர் பாஸ்ட், எக்ஸ்பிரஸ் ரயில்களில் இணைக்கப்படும். அனைத்து பயணிகளுக்கும் ஏதுவாக குறைவான கட்டணம் நிர்ணயம் செய்யப்படும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.