சென்னையில் 26,000 வீடுகளில் மழைநீர் சேகரிப்பு வசதி இல்லை

சென்னை மாநகராட்சி சார்பில் கடந்த பிப்ரவரி முதல் இப்போது வரை 3,26,558 கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில் 2,57,897 கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு நல்ல நிலையில் உள்ளது. 19,424 கட்டிடங்களில் சிறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். 43,543 கட்டிடங்களில் புதிதாக மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. எனினும் 26,097 கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது. 

பருவமழை காலம் தொடங்கியிருப்பதால் சென்னை மாநகராட்சியில் 120 சமுதாய கிணறுகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. இதேபோல குடிநீர் வாரியம் சார்பில் 190 சமுதாய கிணறுகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *