2 நாட்களுக்கு மழை நீடிக்கும்

2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துல்ளது. இதுதொடர்பாக செந்னை வானிலை மையம் இன்று செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளது.

“குமரி கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தொடர்ந்து நீடிக்கிறது. இதன்காரணமாக அடுத்த 48 மணி நேரத்துக்கு தென், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசமான மழை பெய்யக்கூடும். கேரளா, கர்நாடகா, லட்சத்தீவு பகுதிகளில் மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும். எனவே மீனவர்கள் இரு நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம்” என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *