ராஜஸ்தானில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு.. பைலட் திரும்பியதால் கெத்து காட்டுகிறார் முதல்வர் கெலாட்…

ராஜஸ்தானில் கடந்த 2018 இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று பாஜகவிடம் இருந்து ஆட்சியைப் பறித்தது. அந்த மாநில முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக துணை முதல்வர் சச்சின் பைலட் கடந்த மாதம் போர்க்கொடி உயர்த்தினார்.

அவரும் அவரது ஆதரவு எம்எல்ஏக்களும் தனி அணியாக செயல்பட்டனர். இதைத் தொடர்ந்து சச்சினின் துணை முதல்வர் பதவி, மாநில காங்கிரஸ் தலைவர் பதவி பறிக்கப்பட்டது.
அவர் உட்பட 19 எம்எல்ஏக்களுக்கு தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

ராஜஸ்தான் சட்டப்பேரவை கூட்டம்
ராஜஸ்தான் சட்டப்பேரவை கூட்டம்

இந்த நோட்டீஸை எதிர்த்து சச்சின் பைலட் அணி நீதிமன்றத்துக்கு சென்றது. பைலட்டின் பின்னணியில் பாஜக இருப்பது தெளிவாகத் தெரிந்தது.
திடீர் திருப்பமாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை, சச்சின் பைலட் டெல்லியில் சில நாட்களுக்கு முன்பு சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து காட்சிகள் மாறின.

ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் எம்எல்ஏக்களின் கூட்டம் ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்வர் அசோக் கெலாட்டும் சச்சின் பைலட்டும் நேருக்கு நேர் சந்தித்துப் பேசி சமரசமாகினர்.
ஏற்கெனவே திட்டமிட்டபடி ராஜஸ்தான் சட்டப்பேரவை இன்று காலை கூடியது.

சட்டப்பேரவை கூட்டத்துக்கு வருகிறார் சச்சின் பைலட்.
சட்டப்பேரவை கூட்டத்துக்கு வருகிறார் சச்சின் பைலட்.

இன்றைய தினமே சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
ராஜஸ்தான் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 101 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. காங்கிரஸ் கூட்டணிக்கு 102 எம்எல்ஏக்கள் பலம் இருந்தது.

சச்சின் பைலட்டிடம் அவர் உட்பட 19 எம்எல்ஏக்களும் 3 சுயேச்சைகளும் உள்ளனர். அந்த வகையில் காங்கிரஸ் கூட்டணிக்கு கூடுதலாக 22 எம்எல்ஏக்கள் பலம் கிடைத்துள்ளது.

சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்க வந்த பாஜக மூத்த தலைவர் வசுந்தரா ராஜே.
சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்க வந்த பாஜக மூத்த தலைவர் வசுந்தரா ராஜே.

ஒட்டுமொத்தமாக 124 எம்எல்ஏக்கள் இருப்பதால் முதல்வர் அசோக் கெலாட் சட்டப்பேரவையில் கெத்து காட்டுவார் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.பாஜக மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான வசுந்தரா ராஜே கூறும்போது, “ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசு நீண்ட காலம் நிலைக்காது” என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *