4 தெய்வங்கள்- ரஜினி உருக்கம்

இயக்குநர் பாலசந்தர் கடந்த 2014 டிசம்பர் 23-ம் தேதி காலமானார். இன்று அவரது 90-வது பிறந்த நாள். இதையொட்டி நடிகர் ரஜினி காந்த், கமலஹாசன் ஆகியோர் இயக்குநர் பாலசந்தரை நினைவுகூர்ந்துள்ளனர்.


நடிகர் ரஜினி வீடியோவில் வெளியிட்ட பதிவில், “இன்றைக்கு என் குருநாதர் கே.பி. சாருடைய 90-வது பிறந்த நாள். அவர் என்னை அறிமுகப்படுத்தவில்லை என்றால்கூட, நான் நடிகனாகியிருப்பேன்.

கன்னட மொழியில் வில்லனாகவோ, சின்ன, சின்ன கதாபாத்திரங்கள் நடித்து சின்ன நடிகனாக இருந்திருப்பேன்.என்னுடைய வாழ்க்கையில் எனது அப்பா, அம்மா, வளர்த்து ஆளாக்கிய அண்ணா, அதன்பிறகு பாலசந்தர் சார். இவர்கள் 4 பேருமே தெய்வங்கள்” என்று தெரிவித்துள்ளார்.


நடிகர் கமல்ஹாசன் வெளியிடுள்ள பதிவில், மேடைதோறும் புகழ் முழங்கும் அன்பு மாணாக்கன் இவரால் அவரா அவரால் இவரா எவரும் அறியா அதிசயம். அவர்களுள் புதைந்த ரகசியம் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *