‘சத்தியமா விடவே கூடாது’ -நடிகர் ரஜினி ஆவேசம்# rajini

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்து வைத்திருந்ததாக தந்தை ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸை போலீஸார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். போலீஸ் நிலையத்தில் இருவரும் சித்ரவதை செய்யப்பட்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பின்னர் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.


இந்த கொடூர சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நடிகர் ரஜினி காந்த் தொலைபேசியில் அழைத்து விசாரித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


இதைத் தொடர்ந்து ரஜினி காந்த் இன்று ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், தந்தையையும், மகனையும் சித்ரவதை செய்து மிருகத்தனமாகக் கொன்றதை மனித இனமே எதிர்த்து கண்டித்த பிறகும், காவல் நிலையத்தில் மாஜிஸ்திரேட் எதிரிலேயே சில காவலர்கள் நடந்து கொண்ட முறையும், பேசிய பேச்சும் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தே ஆக வேண்டும். விடக்கூடாது. சத்தியமா விடவே கூடாது என்று தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்தின் ஆவேச கருத்துகள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *