தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ராகுல் பிரீத் சிங். தமிழில் தடையறத் தாக்க, என்னமோ ஏதோ, ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று, தேவ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்தியன் 2, அயலான் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
தெலுங்கில் ராகுல் பிரீத் சிங் நடித்த திரைப்படங்களின் எண்ணிக்கை அதிகம். பாலிவுட் திரையுலகிலும் கால் ஊன்ற முயற்சி செய்து வருகிறார்.
உடற்பயிற்சியில் ராகுல் பிரீத் சிங்குக்கு ஆர்வம் அதிகம். லாக் டவுன் காலத்தில் வீட்டிலேயே உடற்பயிற்சி செய்து புகைப்படம், வீடியோக்களை இன்ஸ்டிகிராமில் வெளியிட்டு வந்தார். இப்போது படப்பிடிப்புகளில் பிசியாகிவிட்டார். எனினும் உடற்பயிற்சியை கைவிடவில்லை.
தற்போது ஹைதராபாத்தில் முகாமிட்டுள்ள அவர் படப்பிடிப்புகளில் பங்கேற்று வருகிறார். தெலுங்கு நடிகை லட்சுமி பிரசன்னா கயிறு கட்டி இழுக்க அதை தாண்டி ராகுல் பிரீத் சிங் ஓடும் வீடியோ சமூக வலைதளத்தில் தெறித்து ஓடிக் கொண்டிருக்கிறது.
கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கை கதையை மையமாகக் கொண்ட திரைப்படத்தில் நடிக்கவும் ராகுல் பிரீத் சிங் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எடை தூக்குவது எல்லாம் அவருக்கு அல்வா சாப்பிடுகிற மாதிரி. அவரது எடை தூக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களை இன்றும் ஆட்டம் காண வைத்துக் கொண்டிருக்கின்றன.