ஜூலை 29-ல் ராமர் கோயில் கட்டுமான பணி தொடக்கம்

வரும் 29-ம் தேதி அல்லது ஆகஸ்ட் 5-ம் தேதி ராமர் கோயில் கட்டுமான பணிகள் தொடங்கும் என்று ராமர் கோயில் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.


அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம் என்று கடந்த 2019 நவம்பரில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுபடி ராமர் கோயில் கட்டுமானப் பணிக்காக புதிய அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது.


அதன் தலைவர் நிரித்ய கோபால் தாஸ் தலைமையில் அண்மையில் அறக்கட்டளை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.


வரும் 29-ம் தேதி அல்லது ஆகஸ்ட் 5-ம் தேதி ராமர் கோயில் கட்டுமான பணியை தொடங்கலாம் என்று கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. பூமி பூஜையை பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக தொடங்கி வைக்க உள்ளார்.


இரு நாட்களில் பிரதமர் தேர்வு செய்யும் நாளில் ராமர் கோயில் கட்டுமானப் பணி தொடங்கும் என்று அறக்கட்டளை தலைவர் நிரித்ய கோபால் தாஸ் தெரிவித்துள்ளார். ராமர் கோயிலுக்குள் சீதைக்காக தனி கோயில் கட்டப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *