இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று புகழ் பெற்றவர் ராஷ்மி தேசாய். இந்தி, போஜ்புரி, அசாம் மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் மிகவும்ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். நாள்தோறும் புகைப்படம், வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
அதோடு இணையத்தில் எந்த சவால் வந்தாலும் அதை முதல் ஆளாக ஏற்று கொள்வார். அண்மைகாலமாக இணையத்தில் அமெரிக்க ராப் பாடகி கார்டி பியின் பாடலுக்கு நடனம் ஆடும் சவால் பிரபலமடைந்து வருகிறது.
இந்த சவாலில் ராஷ்மி தேசாயும் இணைந்திருக்கிறார். கார்டி பியின் ராப் பாடலுக்கு குட்டை பாாடையில் ராஷ்மி குனிந்து நிமிர்த்து, துள்ளி குதித்து ஆடுகிறார். இந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அனைத்து சமூக வலைதளங்களில் ராஷ்மியின் வீடியோ துள்ளி குதித்து ஓடிக் கொண்டிருக்கிறது.