இணையத்தில் ரேஷன் ஒப்புதல் படிவம்

தமிழக ரேஷன் கடைகளில் ரேஷன் கார்டின் குடும்ப தலைவர் அல்லது உறுப்பினர்களின் கைரேகை பதிவு செய்து அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகின்றன. முதியவர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டோர் கடைக்கு செல்ல முடியாத நிலையில் தங்களுக்கு வேண்டியவர்களை அனுப்பி பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.
இதற்கு ரேஷன் கடை காரரிடம் ஒப்புதல் படிவம் வழங்க வேண்டும். இந்த படிவத்தை www.tnpds.gov.in இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அந்த படிவத்துடன் விண்ணப்பிக்கும்போது உரிய முறையில் சரிபார்த்து விரைந்து ஒப்புதல் தர அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று உணவுத் துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *