ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் கடந்த 1-ம் தேதி அமல் செய்யப்பட்டது. இதன்படி பயோமெட்ரிக் நடைமுறையில் குடும்ப உறுப்பினர் விரல் ரேகையை பதிவு செய்த பிறகே பொருட்கள் வழங்கப்பட்டன.
ஆனால் இதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டன. சர்வர் பிரச்சினையால் பொதுமக்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி ரேஷன் கடைகளில் விரல் ரேகையை பதிவு செய்யும் பயோ மெட்ரிக் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே இருந்த நடைமுறைபடி ரேஷன் கார்ட்டை ஸ்கேன் செய்து பொருட்கள் வழங்கப்படுகின்றன.