டிச. 20 வரை சர்க்கரை அட்டையை, அரிசி அட்டையாக மாற்றலாம்

சர்க்கரை அட்டையை, அரிசி அட்டையாக மாற்ற வரும் 20-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் பொதுவிநியோக திட்டத்தின் கீழ் 5,80,298 ரேஷன் அட்டைகள் சர்க்கரை அட்டைகளாக உள்ளன. இந்த அட்டைகளை அரிசி அட்டையாக மாற்ற டிசம்பர் 20-ம் தேதி வரை அவகாசம் வழஹ்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் www.tnpds.gov.in இணையதளத்திலும், சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள், உதவி ஆணையர்களிடமும் வரும் 20-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்” என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *