பொருட்கள் வாங்காவிட்டால் ரேஷன் கார்டு ரத்தாகுமா? என்பதற்கு அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
“ரேஷனில் பல மாதங்கள் பொருட்கள் வாங்கவில்லை என்றாலும் யாருடைய கார்டும் ரத்து செய்யப்படாது, முடக்கப்படாது. அவர்கள் எந்த மாதம் பொருட்கள் வாங்க செல்கின்றனரோ அந்த மாதத்துக்கான பொருட்கள் மட்டுமே வழங்கப்படும். வாங்காத மாதங்களுக்கான பொருட்கள் வழங்கப்படாது.
பொருட்கள் வாங்காவிட்டால் ரேஷன் கார்டு ரத்தாகும் என்று பரப்பப்படும் வதந்தியை யாரும் நம்ப வேண்டாம். பொருட்கள் வாங்க விருப்பம் இல்லாதவர்கள் பொது விநியோக திட்ட இணையதளம் வாயிலாக அரசுக்கு விட்டுக் கொடுக்கும் வசதி உள்ளது” என்று கூட்டுறவு மற்றும் உணவு துறை மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.