ரேஷன் கடைகளில் மண்எண்ணெய் விலை உயருகிறது.
தமிழக உணவு பொருள் வழங்கல் மற்றும் பாதுகாப்புத் துறை ஆணையர் சார்பில் சென்னை தவிர அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
“சென்னை மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் அக்டோபர் 1-ம் தேதி முதல் ரேஷனில் வழங்கப்படும் மண்எண்ணெய் விலையை குறைந்தபட்சம் ரூ.1.5 முதல் அதிகபட்சமாக ரூ.16.50 வரை உயர்த்தி விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது” என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ரேஷன் கடைகளில் மண்எண்ணெய் லிட்டர் ரூ.13.70-க்கு விற்கப்படுகிறது. புதிய உத்தரவின்படி அக்டோபர் முதல் லிட்டருக்கு ரூ.1.30 முதல் ரூ.2.80 வரை விலை உயரும்.