ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 2 முகக்கசவம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அண்மையில் அறிவித்தது.
இதன்படி ரேஷன் கடையில் முகக்கவசம் வழங்கும் திட்டத்தை வரும் 27-ம் தேதி திங்கள்கிழமை முதல்வர் பழனிசாமி தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைக்கிறார் என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
ரேஷன் கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க அந்தந்த ரேஷன் கடைகாரர்கள் பகுதி பகுதியாக ரேஷன் பொருட்களை விநியோகித்து வருகின்றனர். எனவே முகக்கவசம் எப்போது வழங்கப்படும் என்பதை ரேஷன் கடைகாரர்களிடம் முன்கூட்டியே கேட்டு அறிந்து கொள்ளுங்கள் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.