ரேஷனில் காலதாமதமின்றி பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என்ரு தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழக அரசின் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் சார்பில் அனைத்து மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
“பொது விநியோக திட்டத்தை சீரமைத்து உரிய பயனாளிகளுக்கு உரிய முறையில் அத்தியாவசிய பொருட்கள் சென்றடைவதை உறுதி செய்ய பயோமெட்ரிக் அடிப்படையில் ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் கடந்த செப். 1-ம் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த புதிய திட்டத்தால் ரேஷன் அட்டைதாரர்கள் அத்தியாவசிய பொருட்களை பெறுவதில் தாமதம், சிரமங்கள் ஏற்படுவது தெரியவந்துள்ளது.
இதற்கு தீர்வு காண விற்பனை முனைய இயந்திரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
புதிய நடைமுறை அக். 14 முதல் அமலுக்கு வருகிறது. இதன்மூலம் ரேஷன் அட்டைதாரர்கள் காலதாமதமின்றி அத்தியாவசிய பொருட்களை பெற முடியும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.