செறிவூட்டப்பட்ட அரிசி ரேஷனில் விநியோகம் செய்யப்படுகிறது.
தமிழக ரேஷன் கடைகளில் அரிசி கார்டுதாரர்களுக்கு புழுங்கல், பச்சை அரிசி விநியோகம் செய்யப்படுகிறது.
ஊட்டச் சத்து குறைபாட்டை போக்க இரும்பு சத்து அடங்கிய செறிவூட்டப்பட்ட அரிசியை விநியோகம் செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்துள்ளன.
இதன்படி செறிவூட்டப்பட்ட அரிசியை ரேஷன் கடைகளில் வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி இன்று தொடங்கிவைத்தார்.
இந்த அரிசியில் இரும்பு சத்து, போலிக் அமிலம்,வைட்டமின் பி12 ஆகிய சத்துகள் உள்ளன.
இந்த அரிசியை சாப்பிடுவதால் ரத்த உற்பத்தி அதிகரிக்கும். ரத்த சோகை பிரச்சினை ஏற்படாது.
முதல்கட்டமாக அக்டோபர் 1-ம் தேதி முதல் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் செறிவூட்டப்பட்ட ரேஷன் அரிசி வழங்கப்படுகிறது. இத்திட்டம் 3 ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படும்.