செப். 25, 26-ம் தேதிகளில் ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்படாது

செப். 25, 26-ம் தேதிகளில் ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கடைகளில் கைரேகை பதிவுகளை வைத்து பொருட்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக ரேஷன் கடை இயந்திரங்களில் மென்பொருள் பதிவேற்றம் செய்யும் பணி செப். 25, 26-ம் தேதிகளில் நடைபெறுகிறது.

அனைத்து ரேஷன் கடைதாரர்களும் தங்களது மின்னணு விற்பனை முனைய இயந்திரங்களை வட்ட உதவி ஆணையர் அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளனர்.

எனவே செப். 25, 26-ம் தேதிகளில் ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்படாது. அதற்குப் பதிலாக 28, 29-ம் தேதிகளில் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்று உணவுப் பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை துணை ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *