வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் அட்டைதாரர்களுக்கு தலா 2 முகக்கவசங்கள் இலவசமாக வழங்கப்பட உள்ளன.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச முகக்கவசம் வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை தொடங்கிவைத்தார். இதன்படி சென்னை மாநகராட்சி நீங்கலாக, இதர பேருராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் முகக்கவசம் வழங்கப்பட உள்ளது.
வரும் 1, 3, 4-ம் தேதிகளில் வீடுகளுக்கு நேரடியாக வந்து டோக்கன் வழங்கப்படும். அந்த டோக்கன் அடிப்படையில் வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் தலா 2 முகக்கவசங்களை பெற்றுக் கொள்ளலாம் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.